மாநில செய்திகள்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் + "||" + MK Stalin condemns the arrest of DMK secretary RS Bharathi

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது என்று மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி  இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

ஆர்.எஸ் பாரதி கைதுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த  ஆர்.எஸ் பாரதி மீதான மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து  கைது செய்துள்ளார்.  எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது” என்று பதிவிட்டுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை - திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம்
திமுகவில் இருந்து தன்னை நீக்கினாலும் கவலை இல்லை என்று திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
2. தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்க போராட்டம்
தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி நடக்கிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுகவை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. திமுக இயக்கத்தை இந்து விரோதி என்று திசை திருப்பி விட முயற்சிக்கிறார்கள் - திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக இயக்கத்தை இந்து விரோதி என்று சிலர் திசை திருப்பி விட முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
5. தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.