மாநில செய்திகள்

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் + "||" + DMK organaising secretary gets interim bail

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன்

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை  இடைக்கால ஜாமீன்
திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. 

இதுதொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இன்று காலை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற  மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். 

தொடர்ந்து,சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன், ஆர்.எஸ் பாரதி ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.எஸ் பாரதி மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது என்று மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
2. ஆர்.எஸ் பாரதி கைது வரவேற்கத்தக்கது- பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்
பிப்ரவரி 15ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது.
3. கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வானால் அடுத்த பொருளாளர் யார்?
பொதுச்செயலாளராக துரை முருகன் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த பொருளாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
5. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக வெளிநடப்பு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.