தேசிய செய்திகள்

மாநிலம் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறை - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் + "||" + Those Returning to Manipur from India, Abroad Will Be Quarantined, Flouters To be Jailed: CM

மாநிலம் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறை - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

மாநிலம் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறை - மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூர் திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
இம்பால்,

கொரோனா வைரஸ்  பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.  எனினும், 4-ஆம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளதால், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பொதுப்போக்குவரத்தை அனுமதித்து வருகின்றன. 

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் ஷராமிக் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும், தவறினால் நிச்சயம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூருக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என  இருக்கும் பட்சத்தில் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார். தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் மேலும் 20,419- பேருக்கு கொரோனா தொற்று
மராட்டியத்தில் புதிதாக 20,419- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் புதிய உச்சம்; ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் மேலும் 5,647-பேருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இன்று ஒரே நாளில் 1187-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 5,679-பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மேலும் 5,679- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்; ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா
கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.