தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள் + "||" + ICMR data on sample testing: Total number of samples tested is 28,34,798; number of samples tested in 24 hours is 1,15,364.

இந்தியாவில் ஒரே நாளில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் ஒரே நாளில் 1.15 லட்சம் கொரோனா பரிசோதனைகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 1,15,364 ஆகும்.
புதுடெல்லி

நாடு தழுவிய ஊரடங்கு  காரணமாக தவிர்க்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள்ன்எண்ணிக்கை 36-70 லட்சங்களுக்கு இடையில் உள்ளது என்று பல்வேறு மாதிரிகள் மேற்கோள் காட்டி வெள்ளிக்கிழமை மத்திய அரசு தெரிவித்து உள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குரூப் (பி.சி.ஜி) மாதிரியை மேற்கோள் காட்டி புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், ஊரடங்கால்  1.2  முதல் 2.1 லட்சம் உயிர்களை காப்பாற்றியுள்ளது என்றும் கூறி உள்ளது.

ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 78,183 (96.72 சதவீதம்) இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க செயலாளர் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையை (பி.எச்.எஃப்.ஐ) மேற்கோளிட்டு கூறி உள்ளார்.

இன்று  கொரோனா வைரஸ் பாதிப்புகளில்  இந்தியா அதிகபட்ச ஒருநாள் ஸ்பைக்கைப் பதிவு செய்தது, ஒரே நாலில் 6,654 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி  நாட்டை 1.25 லட்சமாக உயர்த்தியுள்ளன.

கொரோனா பாதிப்பு  குறித்த சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவில் மொத்தம் 69,597 பாதிப்புகள் செயலில்உள்ளன, இறப்பு எண்ணிக்கை 3,720 ஆகும். இதுவரை 51,783 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்பு வீதம் சனிக்கிழமை 41.39 சதவீதமாக ஆக இருந்தது.

இந்தியாவில் 41,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள கொரோனா வைரஸ் காரணமாக மராட்டிய மாநிலம் தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. மராட்டியத்திற்கு பிறகு (41,642), தமிழகத்தில் 13,967 பாதிப்புகளும் குஜராத்தில் 12,905 பாதிப்புகளும் உள்ளன. டெல்லியில் 11,659 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி  சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 28,34,798 ஆகும் 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,15,364 ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா நோயாளிகள் சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவும் ஒரு காரணம்
கொரோனா நோய்த்தொற்றின் போது நோயாளிகள் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாவதற்கு ரத்த பிரிவு ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
2. மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது -மும்பை மாநகராட்சி
மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என பிரஹன்மும்பை மாநகராட்சி கூறி உள்ளது.
3. செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு- இறப்பு உச்சத்தை தொடும்-அதிர்ச்சி தகவல்
செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைதொடும். அப்போது ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும்
4. உச்சம் தொடும் கொரோனா: இந்தியாவில் 24 மணி நேரத்தில் பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
5. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்- மருத்துவமனை தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.