மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி + "||" + Corona Transmission is not community spread in Tamil Nadu - Chief Minister Palanisamy

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை  - முதல்வர் பழனிசாமி
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்,

முதல் அமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன.  புறநகர் பகுதிகளில் சிறு குறு தொழில்கள் இயங்கத்தொடங்கியுள்ளன.  

ஆட்டோக்கள் இயக்கவும் சலூன்களை இயக்கவும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக் குழு ஆலோசனையின் படி கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை.கொரோனா தடுப்பதில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது. 

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ் பாரதி இழிவாகப் பேசியபோதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். இ டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ் பாரதி கூறியதில் உண்மையில்லை. ஏதோ விஞ்ஞானி போலப் பத்திரிகை விளம்பரத்துக்காகப் பொய் புகார் கொடுத்துள்ளார்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
கொரோனா பாதிப்பில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. நாட்டில் கடந்த 6 நாட்களில் 3 லட்சம் அதிகரித்த கொரோனா பாதிப்பு; அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கடந்த 3ந்தேதி முதல் இன்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சம் அதிகரித்து உள்ளது.
3. தெலுங்கானா மந்திரி, மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தெலுங்கானாவில் மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. கேரள விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் கோழிக்கோடு விமான விபத்தில் பலியான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னையில் 8-வது முறையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.