தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு + "||" + Increasing corona prevalence day by day in Puducherry

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரி

புதுச்சேரி சேர்ந்த 16 பேர், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரும், மாஹே பகுதியைச் சேர்ந்த இருவர் என 19 பேரும், கூடுதலாக ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தனர்.

இதற்கிடையே, சென்னையிலிருந்து திரும்பிய இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று காலை சுகாதாரத்துறை அறிவித்தது.

இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் இந்நிலையில், புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, 4 பேரும் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம் இந்நோய்த் தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது

இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, இன்று முதல் மீண்டும் எல்லைகள் முடக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து இ-பாஸ் இன்றி வெளிமாநிலத்தில் இருந்தது புதுச்சேரிக்குள் அனுமதிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. புலம்பெயர்ந்தோரின்வேதனை: ரெயில் நிலையத்தில் தாயார் இறந்தது தெரியாமல் எழுப்ப முயன்ற குழந்தை
முடிவில்லாத புலம்பெயர்ந்த நெருக்கடியில் பீகார் நிலையத்தில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்ப முயற்சிக்கிறது
2. கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்தது
கொரோனா வைரஸ்: பிரேசில் இந்த வாரத்தில் நான்காவது முறையாக 1,000 இறப்புகளைப் பதிவு செய்து உள்ளது. அங்கு மொத்தம் இறப்பு எண்ணிக்கை 24,512 ஆக உள்ளது.
3. தொடரும் வேதனை: சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
4. கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பு; கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா?
கேரள செயல்பாடுகள் தோல்வியடைகிறதா? புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் சுகாதார ஊழியர்களிடையே பரவுவது அதிகாரிகளை கவலையடையச் செய்கிறது.
5. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரிவித்து உள்ளது.