மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெப்பநிலை + "||" + Temperatures exceeded 100 degrees in 6 places in Tamil Nadu

தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெப்பநிலை

தமிழகத்தில் 6 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெப்பநிலை
தமிழகத்தில் 2வது நாளாக 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதி நிறைவடைகிறது.  கத்திரி வெயிலால் கடந்த சில நாட்களாக கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது.  சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100ஐ கடந்து பதிவானது.

சமீபத்தில் தெற்கு வங்க கடலில் தோன்றி வங்காளதேசம் நோக்கி பயணித்த அம்பன் புயலால், தமிழகத்தில் கடும் வெப்பநிலை நிலவியது.  இதனால் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தின் 6 இடங்களில் 2வது நாளாக இன்று வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது.  இதன்படி, திருத்தணியில் 110.84 டிகிரி, வேலூர் 108.32 டிகிரி, மீனம்பாக்கம் 106.16 டிகிரி, ஈரோடு 104.72 டிகிரி, திருப்பூர் 104.36 டிகிரி மற்றும் காஞ்சிபுரம் 104.36 டிகிரி என வெப்பநிலை பதிவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் தத்தளித்து, ஊரடங்கில் முடங்கி, வெள்ள நீரில் மிதந்து தவிக்கும் பீகார்...
பீகாரில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,820 ஆக இன்று பதிவாகி உள்ளது.
2. இந்தியாவின் சுரு நகரில் பதிவான உலகின் அதிக வெப்பநிலை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நகரங்களில் நேற்றைய தினத்திற்கான உலகின் அதிக வெப்பநிலை பதிவாகி உள்ளது.
3. சென்னையில் 2வது நாளாக 100 டிகிரியை கடந்த வெப்பநிலை
சென்னையில் 2வது நாளாக இன்று 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.