தேசிய செய்திகள்

அம்பன் புயல்; மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு + "||" + Amban Storm; West Bengal death toll rises to 86

அம்பன் புயல்; மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு

அம்பன் புயல்; மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு
ஆம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா,

தெற்கு வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கடந்த 20ந்தேதி மதியம் 2.30 மணியளவில் கரையை கடந்தது.

புயல் கரையை கடந்தபோது மணிக்கு 160 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.  இதனால் மேற்கு வங்காளத்திலும், ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  புயலால் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய இரு மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன.

இந்த புயலுக்கு 72 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.  இதனை அடுத்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என கூறினார்.  இந்நிலையில், ஆம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்து உள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு
டெல்லியில் நாளை முதல் வழிபாட்டு தலங்கள், உணவு விடுதிகள் திறக்கப்படும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
2. காவலர்கள் தினப்படி ரூ.500 ஆக உயர்வு; முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
காவலர்களுக்கு வழங்கப்படும் தினப்படி ரூ.500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...