தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போர்: இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும்- பிரதமர் மோடி + "||" + PM Modi assures all possible support to Sri Lanka in COVID-19 battle

கொரோனாவுக்கு எதிரான போர்: இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும்- பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான போர்: இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும்- பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.
புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி  இன்று இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடினார், தற்போது நடைபெற்று வரும் கொரோனா தொற்றுநோய் மற்றும் பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து இருவரும் பேசினர்

இரு தலைவர்களும் இந்திய தனியார் துறையால் இலங்கையில் முதலீடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர்.

கொரோனவின் விளைவுகளைத் தணிக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அனைத்து ஆதரவையும் அளிக்கும் என்றும் பிரதமர் இலங்கை அதிபருக்கு உறுதியளித்தார்.

இலங்கையில் இந்திய உதவியுடன் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 5 ஆம் தேதி இலங்கையில் பொது தேர்தல் - 225 இடங்களுக்கு, 7,452 பேர் போட்டி
இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
2. அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ;அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. பொருளாதாரத்தை மேம்படுத்த மினி பட்ஜெட்டை அறிவிக்க உள்ள இங்கிலாந்து அரசு
நீண்டகால கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்த இங்கிலாந்து அரசு புதன்கிழமை மினி பட்ஜெட்டை அறிவிக்க உள்ளது.
4. சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
சீனாவில் பன்றிகளிடையே பரவும் புதுவித காய்ச்சல் எந்த நேரத்திலும் மனிதர்களைத் தாக்கலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
5. வேலூர் மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு கொரோனா பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,378ஆக உயர்ந்து உள்ளது.