தேசிய செய்திகள்

சத்தீஷ்கார் என்கவுண்ட்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டு கொலை + "||" + Two naxals killed in encounter with police in Chhattisgarh

சத்தீஷ்கார் என்கவுண்ட்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

சத்தீஷ்கார் என்கவுண்ட்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்காரில் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டவர் உள்பட 2 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் மன்காபல் கிராமத்தில் கதிராஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அவர்களை நோக்கி திடீரென நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர்.

இதற்கு போலீசார் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது.  இன்று மதியம் 12.30 மணியளவில் நடந்த இந்த சண்டையில், நக்சலைட்டுகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.  அவர்களுடன் வந்தவர்கள் அடர்ந்த காட்டுக்குள் தப்பியோடி விட்டனர்.  போலீசார் 2 உடல்களை கைப்பற்றினர்.

அவர்களில் ஒருவர் மலாங்கீர் பகுதிக்கான மாவோயிஸ்டுகள் குழுவின் உள்ளூர் கொரில்லா படை தளபதி குன்டாத்தூர் என்பதும் மற்றொருவர் ஆய்ட்டு என்றும் தெரிய வந்துள்ளது.  குன்டாத்தூர் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.