மாநில செய்திகள்

உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவு; அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + Global Coronal Death Rate is Low in Tamil Nadu; Minister Vijayabaskar

உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவு; அமைச்சர் விஜயபாஸ்கர்

உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவு; அமைச்சர் விஜயபாஸ்கர்
உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவு என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 7 ஆயிரத்து 128 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 100ஐ நெருங்குகிறது.  இந்த நிலையில், தற்போது தமிழகத்துக்கு வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 9 நாளில் மராட்டியம், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 593 பேருக்கு இதுவரை கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு விமானம் மூலம் தமிழகம் வந்தவர்களில் 62 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கொரோனா பாதிப்பில் இருந்து உயர் அழுத்தம், இருதய நோய் போன்றவை உள்ளவர்களும் குணமடைந்துள்ளனர்.  கொரோனா இறப்பு விகிதம் உலக அளவில் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் மிகவும் குறைவு என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகள் கொள்முதல்-அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
கொரோனா தொற்றில் இருந்து மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அதற்கான சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்துள்ளதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
2. கொரோனா பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா வைரஸ் பாதித்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
3. சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி - அமைச்சர் விஜயபாஸ்கர்
சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.