மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு + "||" + Coronation in Chennai increased to 9,989

சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு

சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு
சென்னையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சுகாதார துறை சார்பில் இன்று வெளியான செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களில், சென்னையில், 624 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

சென்னையை தொடர்ந்து, செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 733 ஆக உயர்ந்து உள்ளது.  சென்னையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல்லை, தென்காசி அணைகளில் நீர்மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
2. கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்தது. உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
3. நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது.
4. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு
தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,712 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கு நேற்று விற்பனை ஆனது. இதன்மூலம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டு இருக்கிறது.
5. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 67.6 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது.