தேசிய செய்திகள்

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை + "||" + Biggest spike in Kerala's covid-19 cases, 62 new fresh cases

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை
கேரளாவில் புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் மராட்டிய மாநிலம் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அங்கு நோய்த்தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 62 பேரில், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், 12 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் 31 பேர் வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள்.

இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 794 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 275 ஆகவும் உள்ளது. மேலும் 515 பேர் குணமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது.
2. கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம்
கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
3. கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
4. கொரோனா நோயை சூப்பர் ஸ்ப்ரெட்டராக மாற்ற ரெயில்வே துறை விரும்புகிறது - கேரளா குற்றச்சாட்டு
கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரெயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
5. கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்
கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.