தேசிய செய்திகள்

சிக்கிம் விவகாரம்: டெல்லி அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரம்; திரும்ப பெறப்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால் + "||" + "Sikkim Integral Part Of India": Arvind Kejriwal Withdraws Delhi Ad

சிக்கிம் விவகாரம்: டெல்லி அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரம்; திரும்ப பெறப்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்

சிக்கிம் விவகாரம்: டெல்லி அரசு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரம்; திரும்ப பெறப்பட்டது - அரவிந்த் கெஜ்ரிவால்
சிக்கிம் தனி நாடு என்று டெல்லி அரசு சா்ரபில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு ஒன்றை செய்தி தாள்களில் வெளியிட்டிருந்தது. அதில் நேபாளம், பூடான் போன்று தனி நாடை போன்று இந்தியாவை சேர்ந்த சிக்கிம் மாநிலத்தையும் தனி நாடு என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனை கண்ட சிக்கிம் மாநில தலைமை செயலாளர் சிக்கிம் மாநிலம் 1975ம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி 22 வது மாநிலமாக மாறியது. அன்றில் இருந்து நமது பெரிய நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமை கொள்ளும் மக்களுக்கு இந்த விளம்பரம் வேதனையளிக்கிறது. இந்த விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் எனவும் சிக்கிம் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் வேறு ஒரு விளம்பரத்தை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டார்.


சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் தனது டுவிட்டர் பக்கத்தில் சிக்கிம் இந்தியாவின் ஒருபகுதி. இந்த பிழை கண்டிக்கத்தக்கது.  கடந்த வாரத்தில் தான் மாநில தினம் கொண்டாடப்பட்டது. இதனை டெல்லி அரசு சரி செய்ய வேண்டும் பதிவிட்டார்.

2020 இதனிடையே டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் சிக்கிம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் இது போன்ற பிழைகள் பொறுத்து கொள்ள முடியாது. விளம்பரம் திரும்ப பெறபட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி மாநில துணை நிலை கவர்னர் அனில்பைஜால் சிவில் பாதுகாப்பு இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் டீசல் மீதான வாட் வரி குறைப்பு - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் டீசல் மீதான வாட் வரியை 30%ல் இருந்து 16.75% ஆக குறைத்து அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
2. தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை - அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: யாரும் அச்சப்படத் தேவையில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
4. டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை - முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா பாதித்தவர்களில் 75 % பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5. பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
பிளாஸ்மா தெரபி சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.