தேசிய செய்திகள்

சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற வாலிபருக்கு கொரோனா தொற்று + "||" + Coronavirus infection of a youth from Chennai to Manipur

சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற வாலிபருக்கு கொரோனா தொற்று

சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற வாலிபருக்கு கொரோனா தொற்று
சென்னையில் இருந்து மணிப்பூர் சென்ற வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்பால், 

சென்னையில் இருந்து மணிப்பூர் மாநிலத்துக்கு சென்ற 26 வயது வாலிபருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

புலம் பெயர்ந்தவர்களுக்காக கடந்த 13-ந்தேதி இயக்கப்பட்ட ரெயிலில் வந்த 1,140 பயணிகளில் இவரும் ஒருவர் என்று கூறப்பட்டுள்ளது. அங்கு சென்றதும் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மையத்தில் இருந்த அனைவருக்கும், பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 25 பேரில், 16 பேர் சென்னையில் இருந்து அங்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைப்பு
சென்னையில் உள்ள 400 சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் 60 நொடிகளாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2. சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் பலி
சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
4. சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழப்பு
சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.