மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிக்கு தம்பிதுரை எம்.பி. சம்பளத்தை பகிர்ந்து கொடுத்தார் + "||" + Thambidurai MP He shared the salary

கொரோனா தடுப்பு பணிக்கு தம்பிதுரை எம்.பி. சம்பளத்தை பகிர்ந்து கொடுத்தார்

கொரோனா தடுப்பு பணிக்கு தம்பிதுரை எம்.பி. சம்பளத்தை பகிர்ந்து கொடுத்தார்
கொரோனா தடுப்பு பணிக்கு தம்பிதுரை எம்.பி. சம்பளத்தை பகிர்ந்து கொடுத்தார்.
சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் களைப்பு இன்றி போராடுவதற்காக உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


சிறிய நடவடிக்கைகளின் மூலமாக கொரோனாவுக்கு எதிரான போரில் நானும் பங்களிக்க விரும்புகிறேன். ராஜ்யசபா எம்.பி. என்ற முறையில் என்னுடைய முதல் மாத சம்பளமான ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 133-ல் 50 சதவீதம் தொகையை அதாவது ரூ.61 ஆயிரத்து 566.50-ஐ பிரதமரின் நிவாரண நிதிக்கும், மற்றொரு 50 சதவீத சம்பளத்தை தமிழக முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கும் கொடுக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.