உலக செய்திகள்

லிபியாவில் ராணுவத்துக்கு எதிரான போரில் 7 சிரிய கிளர்ச்சியாளர்கள் படுகொலை + "||" + 7 Syrian rebels killed in Libya's battles

லிபியாவில் ராணுவத்துக்கு எதிரான போரில் 7 சிரிய கிளர்ச்சியாளர்கள் படுகொலை

லிபியாவில் ராணுவத்துக்கு எதிரான போரில் 7 சிரிய கிளர்ச்சியாளர்கள் படுகொலை
லிபியா நாட்டில் ராணுவத்துக்கு எதிரான போரில் சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் 7 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
திரிபோலி,

லிபியாவில் அதிபர் படுகொலைக்கு பின்னர் கலீபா ஹப்தர் தலைமையிலான ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.  இதனை எதிர்த்து சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் துருக்கி நாட்டு கண்காணிப்பின் கீழ் அந்நாட்டு எல்லை வழியே லிபியாவை அடைகின்றனர்.  போருக்கு செல்வதற்காக கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி நாடு ஒப்பந்த அடிப்படையில் சம்பளமும் வழங்கி ஊக்குவிக்கிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தியில், லிபியாவில் நடந்து வரும் போரில் இதுவரை சிரியா நாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் 318 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  பலர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.

லிபியாவில் நேற்று நடந்த போரில் சிரியா நாட்டு கிளர்ச்சியாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.