மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு; சென்னை ராயபுரம் மண்டலம் முதலிடம் + "||" + Chennai's Rayapuram region continues to be the number one corona vulnerable

கொரோனா பாதிப்பு; சென்னை ராயபுரம் மண்டலம் முதலிடம்

கொரோனா பாதிப்பு; சென்னை ராயபுரம் மண்டலம் முதலிடம்
சென்னை ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் பணியாற்றி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.  சென்னையில் கொரோனா பாதிப்பு பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, ராயபுரம் மண்டலம் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் 1,889 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து கோடம்பாக்கம் 1,391, திரு.வி.க.நகர் 1,133, தேனாம்பேட்டை 1,054 மற்றும் தண்டையார்பேட்டை 974 ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.