தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவு + "||" + Open liquor stores in Puducherry tomorrow Government order

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவு
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் தமிழகத்திலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகிறது.

புதுச்சேரியிலும் மதுபான கடைகளை திறக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கவர்னர் கிரண்பெடி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். 

இந்நிலையில், புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் எனவும் கடை ஊழியர்கள், மதுபான பிரியர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்க புதுச்சேரிக்கு வரக்கூடாது என கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நேதாஜி சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை
நேதாஜி சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
2. புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி மாணவர்களின் மருத்துவ கல்வி இடஒதுக்கீடு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
3. தமிழகத்தில் நாளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: சுத்தம் செய்யும் பணி தீவிரம்
தமிழகத்தில் நாளை 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பை முன்னிட்டு பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
4. புதுச்சேரி பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மரணம் அரசு மரியாதையுடன் உடல் தகனம்
புதுவை மாநில பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.
5. புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர் சங்கர் காலமானார்
புதுச்சேரி பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினரும், பொருளாளருமான சங்கர் மாரடைப்பால் உயிரிழந்தார்.