கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு - கேரள சுகாதாரத்துறை + "||" + Active cases in Kerala climb to 322 as 53 more test positive; state reports
கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு - கேரள சுகாதாரத்துறை
கேரளாவில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்,
சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மராட்டிய மாநிலம் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அங்கு நோய்த்தொற்று படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கேரளாவில் இன்று புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளா வந்தவர்கள்
இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 847 ஆகவும், தற்போது வரை 520 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிற்கு 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்