மாநில செய்திகள்

மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த் + "||" + Except for the liquor store opening, The Government of Tamil Nadu is doing well Premalatha Vijayakanth

மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்

மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது - பிரேமலதா விஜயகாந்த்
மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனா பாதித்த பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்காமல் இருந்து இருக்கலாம் என்றும் மதுக்கடை திறப்பு தவிர, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

மேலும் தி.மு.க ஆட்சியில் இருந்தால், இதை விட சிறப்பாக என்ன செய்து விடப் போகிறார்கள் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் தமிழகம் மீண்டு வரும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.