தேசிய செய்திகள்

இந்தி நடிகர் கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Actor Kiran Kumar tests positive for coronavirus

இந்தி நடிகர் கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு

இந்தி நடிகர் கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு
இந்தி நடிகர் கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு
மும்பை,

இந்தி நடிகர் கிரண்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த பழம்பெரும் நடிகர் கிரண்குமார். இவர் 500-க்கும் அதிகமான இந்தி, குஜராத்தி, போஜ்புரி படங்களில் நடித்து உள்ளார். டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார். 74 வயதாகும் கிரண்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


இதுகுறித்து நடிகர் கிரண்குமார் கூறியதாவது:-

எனக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை. கடந்த 14-ந் தேதி வழக்கமான மருத்துவ சோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றேன். அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற கொரோனா சோதனை கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. எனவே எனக்கும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

ஆனால் எனக்கு எந்த நோய் அறிகுறிகளும் அப்போது இல்லை. இப்போதும் இல்லை. காய்ச்சல், சளி எதுவும் இல்லை. நான் நலமாக உள்ளேன். வீட்டில் நானே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.

எனது குடும்பத்தினர் வீட்டில் 2-வது மாடியில் உள்ளனர். நான் 3-வது மாடியில் உள்ளேன். வருகிற 26 அல்லது 27-ந் தேதி 2-வது சோதனை மேற்கொள்ளப்படும். அப்போது நான் முற்றிலுமாக குணமடைவேன் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.