மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் + "||" + Schools will be announced soon

பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறினார்.
ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2-ம் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. 7 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டு நீட் தேர்வில் 100 அரசு பள்ளி மாணவர்களாவது வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.


10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

கோபி பகுதியில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ரூ.102 கோடி மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே 4 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அப்போது நிருபர்கள் அமைச்சரிடம், ‘10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்களா’? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், ‘மதிப்பெண்கள் வந்த பிறகு அரசு அதை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கும்’ என்று பதில் அளித்தார்.