தேசிய செய்திகள்

தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை? - மத்திய அரசு அறிவிப்பு + "||" + Which of these Indians would like to return home? - Notice of Central Government

தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை? - மத்திய அரசு அறிவிப்பு

தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை? - மத்திய அரசு அறிவிப்பு
தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை என்பது குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி, 

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள், முதலில் அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கட்டாய சூழ்நிலைகளில் உள்ளவர்கள் தாயகம் திரும்ப முன்னுரிமை அளிக்கப்படும்.

வேலை இழந்தவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கர்ப்பிணிகள், குடும்ப உறுப்பினரின் இறப்புக்கு செல்பவர்கள், விசா முடிவடையும் நிலையில் இருப்பவர்கள், அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், முதியோர், மாணவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயண செலவை அவர்களே ஏற்க வேண்டும். அதுபோல், இந்தியா திரும்பிய பிறகு, சுகாதார அமைச்சகம் வகுத்த நெறிமுறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை
புதிய வெளிநாட்டு மசோதாவால் 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.