மாநில செய்திகள்

ஊரடங்கு எதிரொலி; ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது + "||" + Curfew echo; The canceled flight has resumed

ஊரடங்கு எதிரொலி; ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது

ஊரடங்கு எதிரொலி; ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது
ஊரடங்கு எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியது.
சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.  உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இந்நிலையில், ஊரடங்கு எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.  சென்னையில் இருந்து முதல் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  விமான பயணிகளுக்கு பரிசோதனைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.