மாநில செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து + "||" + Flight from Tuticorin to Chennai canceled

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் ரத்து
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,

நாடு முழுவதும் தமிழகம் உள்பட கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 31ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  இதனால், ரெயில், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி அறிவிப்பு வெளியிட்டார்.  இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.  உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இந்நிலையில், ஊரடங்கு எதிரொலியாக ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.  விமான பயணிகளுக்கு பரிசோதனைகள், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

விமான சேவை தொடங்கிய நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கான விமான முன்பதிவும் தொடங்கியது.  இதற்காக 38 பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டு உள்ளது.  சென்னையில் அதிக அளவு கொரோனா உறுதியான அச்சத்தினால் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து
திருச்சியில் இருந்து செங்கல்பட்டு, நாகர் கோவிலுக்கு இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
2. கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
3. தமிழகத்தில் ஒரே நாளில் நெல்லை-40, தென்காசி-8 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தின் நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் மனு; விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி வியாபாரிகள் கொடுத்த மனுக்கள்மீது விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.
5. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.