தேசிய செய்திகள்

புதுடெல்லியில் தீ விபத்து: 1500 குடிசைகள் எரிந்து சாம்பல் + "||" + Massive Fire Breaks Out At Delhi Slum, 1,500 Shanties Destroyed

புதுடெல்லியில் தீ விபத்து: 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்

புதுடெல்லியில் தீ விபத்து: 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்
புதுடெல்லியில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாமபலானது.
புதுடெல்லி: 

தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ளகுடிசை பகுதியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 12.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது இது குறித்து தகவல் அறிந்ததும் 

நகரில் உள்ள 28 க்கும் மேற்பட்டதீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்றுதீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அதிகாலை 3:40 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் சுமார் 1500 குடிசைகள் எரிந்து சாமபலாகின.  நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து உள்ளனர்.  அரசாங்கம் சார்பில் தற்போது இழப்பு மதிப்பிடப்படுகிறது.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறும்போது துக்ளகாபாத்தில் உள்ள சேரிகளில் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அனைத்து காவல்துறை ஊழியர்களும் உடனடியாக இங்கு வந்தனர். சுமார் 1,000-1,200 குடிசைகள் தீயில் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.இது ஒரு பெரிய தீ என்பதால் இழப்பை தற்போது சரிபார்க்க முடியாது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு 42 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகள், கவச வாகனங்கள்: மத்திய அரசு ஒப்புதல்
சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு 42 ஆயிரம் குண்டு துளைக்காத உடைகளும், 176 குண்டு துளைக்காத கவச வாகனங்களும் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2. டெல்லி 31-ந் தேதி வரை முடக்கம்; முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவிப்பு
வரும் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை வரை, டெல்லியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
3. மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி
மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
4. வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.