உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது + "||" + The death toll from the coronavirus in the United States has crossed one million

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது.
வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பை விட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் இன்று புதிதாக 6,774 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 17,13,000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு மேலும் 216 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,021 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் அமெரிக்காவில், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 4,68,669 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர்
கொரோனா தொற்று நெருக்கடியால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவில் புதிய உச்சம்: கடந்த 24 மணி நேரத்தில் 27,114 -பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
3. சீனா-இந்தியா மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை- அமெரிக்கா முன்னாள் ஆலோசகர்
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால் டிரம்ப் இந்தியாவை ஆதரிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறி உள்ளார்.
4. வேலூரில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வேலூர் மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத்து.
5. அமெரிக்காவில் புதிய உச்சம்-ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.