உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியது + "||" + Worldwide, the number of people infected with the corona virus has reached 56 lakhs

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது.
நியூயார்க், 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 56 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் இன்று மேலும் 53,766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,38,033 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 3,49,323 ஆக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,05,219 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும் (பாதிப்பு - 17,13,463 பேர், உயிரிழப்பு - 1,00,046 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு - 3,77,711 பேர், உயிரிழப்பு - 23,606 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு - 3,62,342 பேர், உயிரிழப்பு - 3,807 பேர்) உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.32 லட்சமாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.32 லட்சமாக உயர்ந்துள்ளது.
3. காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க-கொரோனா பீதி காரணமாக வியாபாரிகள் கண்டிப்பு
கொரோனா பீதி காரணமாக காய்கறி, பழங்களை தொட்டுப்பார்த்து பொதுமக்கள் வாங்கக்கூடாது என வியாபாரிகள் கண்டிப்புடன் சொல்லி விடுகிறார்கள்.
4. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது.
5. கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.