தேசிய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து 329 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினர் + "||" + 329 Indians from the United States returned in a special flight

அமெரிக்காவில் இருந்து 329 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினர்

அமெரிக்காவில் இருந்து 329 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பினர்
அமெரிக்காவில் இருந்து 329 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் நாடு திரும்பி உள்ளனர்.
நியூயார்க், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் திடீரென ஊரடங்கை அறிவித்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தையும் ரத்து செய்தன. அதனால், வேலை, சுற்றுலா மற்றும் மருத்துவத்துக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்து வந்தனர். இவ்வாறு பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன.

இந்தியாவும் ‘வந்தே பாரத்’ என்ற திட்டம் மூலம் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து முதற்கட்டமாக பல்வேறு விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 2-ம் கட்டமாக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் இருந்து தலா 2 விமானங்களும், வாஷிங்டனில் இருந்து ஒரு விமானமும் என மொத்தம் 7 ஏர் இந்தியா சிறப்பு விமானங்கள் இந்திய நகரங்களுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி முதல் விமானம் நியூயார்க் ஜே.எப்.கே. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 329 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு நேற்றுமுன்தினம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் மேலும் 43,742 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி: டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
போராட்டம் என்ற பெயரில் அமெரிக்க வரலாற்றை அழிக்க முயற்சி நடப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
3. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது.
4. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. இந்தியா-சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள்; உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் -அமெரிக்கா
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா கூறி உள்ளது.