மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு + "||" + In TamilNadu Today 817 confirmed corona infection - Health Department notification

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஓரே நாளில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்முலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 17,728 இல் இருந்து 18,545 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,645 இல் இருந்து 12,203 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 567 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,909 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 8,500 பேர் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் மேலும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் உள்ள எந்தவொரு குழந்தைகள் காப்பகத்திலும் கொரோனா தொற்று இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
4. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 343 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-