தேசிய செய்திகள்

ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் விமானங்களில் பயணம் + "||" + About 63 thousand people fly on flights in a single day

ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் விமானங்களில் பயணம்

ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் விமானங்களில் பயணம்
ஒரே நாளில் 63 ஆயிரம் பேர் விமானங்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை தளர்த்தி, உள்நாட்டு விமான சேவை கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 428 விமானங்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டன. இரண்டாவது நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 445 விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த விமானங்கள் மூலம் 62 ஆயிரத்து 641 பயணிகள் பயணம் செய்துள்ளனர். நமது விமான நிலையங்கள் சுமுகமாக இயங்கின. 6 விமானங்களின் புறப்பாடுகள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நாளில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 38 பேருக்கு தொற்று; கொரோனா வைரஸ் பாதிப்பில் நெல்லையை மிஞ்சிய தூத்துக்குடி
கொரோனா வைரஸ் பாதிப்பில் நெல்லை மாவட்டத்தை தூத்துக்குடி மிஞ்சியது. நேற்று ஒரே நாளில் போலீஸ்காரர்கள் உள்பட மேலும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று: சீனாவை முந்தியது பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஒரே நாளில் 4,688 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மொத்த எண்ணிக்கையில் சீனாவை பாகிஸ்தான் முந்தியுள்ளது.
3. ஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் 2,07,615 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஒரே நாளில் அதிகபட்சமாக 8,909 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதன் மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 302 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
4. கொரோனாவால் நிதிநெருக்கடி: விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டம்
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடி காரணமாக, விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விட உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது.
5. ஒரே நாளில் 692 விமானங்களில் 64,651 பேர் பயணம்
ஒரே நாளில் 692 விமானங்களில் 64,651 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.