தேசிய செய்திகள்

நேரு நினைவுநாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி + "||" + Nehru commemoration: Prime Minister Modi, Rahul Gandhi

நேரு நினைவுநாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி

நேரு நினைவுநாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி அஞ்சலி
நேரு நினைவுநாளான நேற்று, பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் டுவிட்டரில் அவருக்கு அஞ்சலி தெரிவித்தனர்.
புதுடெல்லி, 

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘’நமது முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் நினைவுதினத்தையொட்டி, அவருக்கு எனது அஞ்சலி” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நேரு, துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர். நவீன இந்தியாவின் சிற்பி. நமது முதல் பிரதமர். தொலைநோக்கு பார்வை கொண்டவர். காலம் கடந்து நிற்கும் பல உலகத்தர நிறுவனங்கள் மூலம் அவர் எப்போதும் வாழ்வார். அவருக்கு அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை, மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
2. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
3. இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரை
இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
4. எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை
எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
5. பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன?
கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.