தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று + "||" + Coronal impact in India rises to 1.51 lakh: 6,387 people infected in 24 hours

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சமாக உயர்வு: 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்ந்தது. 24 மணிநேரத்தில் 6,387 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் மார்ச் 25-ந் தேதி தொடங்கி ஊரடங்கு அமலில் இருந்து வந்தாலும், ஆனாலும் கொரோனா தொடர்ந்து காட்டுத்தீ போல நாடு முழுவதும் பரவி வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6.387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரஸ் தாக்கி, ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 425 ஆக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 4 ஆக இருக்கிறது.

இந்தியாவில் குணம் அடைந்தோர் சதவீதம் 42.45 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 170 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில் 27 பேரும், டெல்லியில் 12 பேரும், தமிழ்நாட்டில் 9 பேரும், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 5 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும், ஆந்திரா, அரியானா, கேரளா, தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும், சண்டிகார் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களிலும் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.

இதன்மூலம் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 4,337 ஆக அதிகரித்துள்ளது.

பலியில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 1,792 பேர் பலியாகி இருக் கிறார்கள்.

குஜராத்தில் 915 பேரும், மத்திய பிரதேசத்தில் 305 பேரும், டெல்லியில் 288 பேரும், மேற்கு வங்காளத்தில் 283 பேரும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 170 பேரும், தமிழ்நாட்டில் 127 பேரும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தலா 57 பேரும், கர்நாடகத்தில் 44 பேரும், பஞ்சாப்பில் 40 பேரும், ஜம்மு காஷ்மீரில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அரியானாவில் 17 பேரும், பீகாரில் 13 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளாவில் 6 பேரும், இமாசலபிரதேசத்தில் 5 பேரும், ஜார்கண்ட், உத்தரகாண்ட், சண்டிகார், அசாமில் தலா 4 பேரும், மேகாலயாவில் ஒருவரும் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனா வைரசால் பலியானவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்தவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 767 என்ற நிலையில், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுடன் முதல் இடம் வகிப்பது மராட்டிய மாநிலம் ஆகும். அங்கு 54 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு 17 ஆயிரத்து 728 பேருடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. குஜராத் 14 ஆயிரத்து 821 பேருடன் மூன்றாம் இடம் வகிக்கிறது.

ராஜஸ்தானில் 7,536, மத்திய பிரதேசத்தில் 7,024, உத்தரபிரதேசத்தில் 6,548, மேற்குவங்காளத்தில் 4,009, ஆந்திராவில் 3,171, பீகாரில் 2,983 பேர், கர்நாடகத்தில் 2,283 பேர், பஞ்சாப்பில் 2,106, தெலுங்கானாவில் 1,991, ஜம்மு காஷ்மீரில் 1,759, ஒடிசாவில் 1,517, அரியானாவில் 1,305, கேரளாவில் 963 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

அசாமில் 616, ஜார்கண்டில் 426, உத்தரகாண்டில் 401, சத்தீஷ்காரில் 361, சண்டிகாரில் 266, இமாசலபிரதேசத்தில் 247, திரிபுரா 207, கோவாவில் 67, லடாக்கில் 53, புதுச்சேரியில் 46, மணிப்பூரில் 39, அந்தமான் நிகோபாரில் 33, மேகாலயாவில் 15, நாகலாந்தில் 4, தாதர்நகர்ஹவேலி மற்றும் அருணாசலபிரதேசத்தில் தலா 2 பேரும், மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் கூறுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்ந்துள்ளது.
3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: இன்று விசாரணையை தொடங்குகிறது சிபிஐ
இந்தியாவை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் சிபிஐ இன்று இன்று விசாரணையை தொடங்குகிறது
4. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்
பதற்றம் தணிந்த பிறகு லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.