தேசிய செய்திகள்

முற்றும் மோதல்: கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி + "||" + Do It Yourself, Mamata Banerjee Told Amit Shah On COVID-19. What He Said

முற்றும் மோதல்: கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி

முற்றும் மோதல்: கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி
நீங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரெயில்களும்,விமானங்களும் ஓடுகின்றன இதனால் தான் கொரோனா அதிகமாக் பரவுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.

கொல்கத்தா

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையில் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கும் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். கொரோனா  விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை செயலாளரும் வங்காள தலைமை செயலாளரும் கடுமையான கடிதங்களை பரிமாறிக்கொண்டது மட்டுமல்லாமல், அமித்ஷா மாநில அரசின் கொரோனா நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி பானர்ஜிக்கு கடிதம் எழுதினார். மம்தா பதிலளிப்பதற்கு முன்பே அவரது கடிதங்கள் ஒன்று ஊடகங்களை சென்றடைந்தது, இதனால் மம்தா கோபம் கொண்டார்.

இந்த நிலையில் மம்தாபானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் அமித் ஷாவிடம் சொன்னேன், நீங்கள் தொடர்ந்து மத்திய குழுக்களை மேற்கு வங்காளத்திற்கு அனுப்புகிறீர்கள். மேற்கு வங்க அரசாங்கத்தால் அந்த வேலையைச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தால், கொரோனா நெருக்கடியை நீங்களே ஏன் கையாளக்கூடாது? எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

நான் பொதுவாக இதையெல்லாம் ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால் நிலைமையைக் கருத்தில் கொண்டு, நான் அமித் ஷாவிடம் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளீர்கள். ஆனால் ரெயில்களும் விமானங்களும் ஓடுகின்றன. 

நான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு சொல்ல விரும்புகிறேன், தயவுசெய்து கொரோனா பரவுவதை பாருங்கள். எங்களுக்கு ஏற்கனவே 1 லட்சம் பாதிப்புகள் உள்ளன. சில பகுதிகள் அரசியலுக்காக பரவ வேண்டும் என்று விரும்புகின்றன. பீகார், ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. நான் என்ன செய்ய முடியும்? இந்த பேரழிவு சூழ்நிலையில், பிரதமர் தலையிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், "என்று அவர் கூறினார்.

இது ஒரு வேண்டுகோளாகத் தெரிந்தாலும்,  பானர்ஜியின் பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்கள் அடுத்த 24 மணி நேரத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மராட்டிய மாநிலம் முழுவதும் இருந்து 36 ரெயில்கள் மேற்கு வங்காளத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தடுப்பது தான்.

திடீரென மேற்கு வங்காளத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்களை அனுப்புவது தன்னை "தொந்தரவு" செய்வதற்கான ஒரு அரசியல் சூழ்ச்சி என்று கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறும் போது

அவர்கள் என்னை அரசியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார்கள், ஆனால் மேற்கு வங்காளத்தை தொந்தரவு செய்கிறார்கள். அரசியல் ரீதியாக என்னை தொந்தரவு செய்யுங்கள், ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்களைப் பற்றி சில திட்டங்களைச் முடிவு செய்யுங்கள்

"இது என்ன முட்டாள்தனம்? நாங்கள் ஒருபுறம் கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறோம், மறுபுறம் சூறாவளி. மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரெயில்களையெல்லாம் அனுப்புகிறார்கள். ரெயில்வே அமைச்சகத்திற்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லை? அவர்கள் அனுப்புவதற்கு முன்பு மாநில அரசுகளை அணுக வேண்டும். அவர்கள் ஏன் எங்களை கலந்தாலோசிக்கவில்லை? அவர்கள் எங்கள் அட்டவணையைப் பின்பற்றவில்லை. அவர்கள் அரசியல் ரீதியாக வசதியானதை செய்கிறார்கள், பலவந்தமாக செய்கிறார்கள். இது மேற்குவங்காளத்திற்கு சிக்கலை ஏற்படுவதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் ஒரு இயற்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம் என கூறினார்.

மம்தா  புலம்பெயர்ந்தோர் மீதான தனது பொறுப்பைக் தட்டி கழிக்க முயற்சிப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டியது   புலம்பெயர்ந்தோருக்கு சிகிச்சையளித்தல், சோதனை செய்தல் அல்லது தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் பொறுப்பை மம்தா பானர்ஜி ஏற்க விரும்பவில்லை.

அவர்கள் எங்கள் திட்டங்களை முறையாக நிறைவேற்றியிருந்தால், அவர்கள் அனைவரும் 15 நாட்களில் திரும்பி இருப்பார்கள் என பா.ஜனதா குற்றம்சாட்டியது.

மம்தா பானர்ஜி அரசாங்கத்திற்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுகளை பா.ஜனதா நேற்று வெளியிட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபர்
மேற்கு வங்காளத்தின் துர்காபூரைச் சேர்ந்த 30 வயதான ஆசிரியர் சிரஞ்சித் திபார் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கும் முதல் நபரானார்.
2. கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ
கொரோனா சிகிச்சை அளிக்கும் கவச உடையில் பெண் டாக்டர் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
3. 6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்
6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி இன்று கண்டுபிட்க்கமுடியாத 5 க்கும் மேற்பட்ட மர்மங்கள் உள்ளதாக விஞ்ஞான இதழான நேச்சர் கூறி உள்ளது.
4. "காற்று வழியாக பரவும் கொரோனா" ஒப்புகொண்ட உலக சுகாதாரா அமைப்பு
கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டு உள்ளது,
5. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.