மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் + "||" + Corona affects 827 people in Tamil Nadu today - Minister Vijayabaskar

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா பாதிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அதன்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


தமிழகத்தில் 710 பேர், பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 117 பேர் என மொத்தம் 827 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 639 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரொனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓசூரில் கொரோனாவுக்கு பெண் பலி
ஓசூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சேலம் தனியார் மருத்துவமனையில் இறந்தார்.
2. சேலத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா
சேலத்தில் மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் கொரோனாவுக்கு பலி: மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு
பண்ருட்டியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பலியானார். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
4. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66,093 ஆக உயர்வு
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 66,093 ஆக உயர்ந்துள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,94,230 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,94,230 ஆக உயர்ந்துள்ளது.