உலக செய்திகள்

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா. + "||" + India-China dispute: Avoid actions that will escalate tensions along border, UN tells both countries

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.

தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது -ஐ.நா.
தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் 

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.

இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில்  படைகளை குவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா, சீனா இறங்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தியாவும், சீனாவும் சர்வதேச எல்லைக்கோட்டு அருகே படைகளை குவித்து வருவதால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையில் யார் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் தீர்மானிக்க முடியாது என அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. "காற்று வழியாக பரவும் கொரோனா" ஒப்புகொண்ட உலக சுகாதாரா அமைப்பு
கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டு உள்ளது,
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
3. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
4. சீனாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்த அனுமதித்தது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
இந்திய வீரர்கள் 20 பேரை படுகொலை செய்த சம்பவத்தில் சீனா தனது நிலைப்பாட்டை நியாப்படுத்த இந்திய அரசு அனுமதித்தது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
5. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...?
கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது