உலக செய்திகள்

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம் + "||" + Corona Is Like Your Wife Anger Over Indonesia Ministers Sexist Remark

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது மந்திரி பேச்சு-பெண்கள் அமைப்புகள் கண்டனம்
கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது என்ற இந்தோனேசிய மந்திரியின் பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜகார்தா

இந்தோனேசியாவில் 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,496 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.வைரஸ் இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட  பல மடங்கு அதிகம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் இந்தோனேசிய பாதுகாப்பு மந்திரி முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் கொரோனா நிலைமையை சரிசெய்ய முடியும்.

கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் அதை கட்டுப்படுத்த வில்லை என்றால் பிறகு உங்களால் முடியாது என்பதை நீங்கள் உணருங்கள். பிறகு நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள் என கூறினார். இதற்கு பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

நாட்டில் பொது அதிகாரிகளின் பாலியல் மற்றும் தவறான மனநிலையையும் காட்டுகிறது என்று மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்தது; 10 பேர் மாயம்
இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் 10 பேர் மாயமாகினர்.
2. பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரிப்பு; இந்தியாவில் கொரோனா வேகமாகபரவுவதை காட்டுகிறது
கொரோனா பரிசோதனையில் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது என்பதை காட்டுகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
3. சென்னை ராயபுரம் மண்டலத்தில் 2500-ஐ நெருங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2500-ஐ நெருங்குகிறது.
4. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் சவும்லாகி நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் - சீனா கோபம்
அமெரிக்கா மற்ற நாடுகள் மீது குற்றம்சாட்டுவதை நிறுத்த வேண்டும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என சீனா கூறி உள்ளது.