உலக செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சீன மாணவர்கள் வெளியேற்றம்? - விரைவில் முடிவு + "||" + The expulsion of Chinese students from the US? -Decision soon

அமெரிக்காவில் இருந்து சீன மாணவர்கள் வெளியேற்றம்? - விரைவில் முடிவு

அமெரிக்காவில் இருந்து சீன மாணவர்கள் வெளியேற்றம்? - விரைவில் முடிவு
அமெரிக்காவில் இருந்து சீன மாணவர்கள் வெளியேற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன், 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல், வர்த்தகம், மனித உரிமைகள் மற்றும் ஹாங்காங் விவகாரம் ஆகியவற்றில் உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதையொட்டி விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சீன அதிகாரிகள் மீது பயண தடை, பொருளாதார தடை விக்க அவர் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசுகையில், “கொரோனா வைரஸ் தொற்று பரவலில் நாம் மகிழ்ச்சியாக இல்லை. ஒட்டுமொத்த உலகமே பாதிப்புகளை சந்தித்து வருகிறது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து வருகிற ஆயிரக்கணக்கான சீன மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றவும், சீன அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கவும் டிரம்ப் நிர்வாகம் விரைவில் முடிவு எடுத்து நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது.
2. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. இந்தியா-சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள்; உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் -அமெரிக்கா
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா கூறி உள்ளது.
4. 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு
59 சீன செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது
5. அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
அமெரிக்காவின் 3வது ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.