மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கத்தாரில் வேலை இழந்து, சிக்கி தவிக்கும் தமிழர்கள் - தாயகம் அழைத்து வர குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் + "||" + The corona virus Tamils stuck in Qatar To bring home Family requests

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கத்தாரில் வேலை இழந்து, சிக்கி தவிக்கும் தமிழர்கள் - தாயகம் அழைத்து வர குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள்

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கத்தாரில் வேலை இழந்து, சிக்கி தவிக்கும் தமிழர்கள் - தாயகம் அழைத்து வர குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தாரில் வேலை இழந்து சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சென்னை, 

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே புலம் பெயர்ந்த தொழிலாளிகளை சிறப்பு ரெயில்கள் மூலம் மத்திய, மாநில அரசுகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் மூலம் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்து குடும்பத்தினரை கண்டு அகம் மகிழ்ந்து உள்ளனர். இதே போன்று இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்கள் அங்கு வேலை இழந்து நிர்கதியாய் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க ‘வந்தே பாரத்‘ திட்டத்தின் கீழ் மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி இந்தியர்களை மீட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், சிவா ஆகியோரும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சக்தி ஆகியோர் கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் உள்ள அல்கூர் என்ற நகரத்தில் இயங்கி வரும் ஒரு என்ஜினீயரிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 2-ந் தேதி முதல் நீண்டநாள் விடுப்பு அளித்துவிட்டு, ஒரு முகாமில் தங்க வைத்து உணவு மட்டும் வழங்கி வருகின்றனர்.

போதிய மருத்துவ உதவிகள் எதுவும் செய்யப்பட்டதாக தெரியவில்லை என்றும் இவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து உள்ளனர். இதனை கேட்ட அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தங்கள் குழந்தைகள், கணவன்மார்கள் எப்போது வீடு திரும்புவார்கள் என்று வழிமேல் விழி வைத்து காத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் வருகிற ஜூன் 3-ந் தேதி கத்தாரில் இருந்து சென்னை மற்றும் திருவனந்தபுரத்துக்கு விமானங்கள் இயக்கப்படுவதாகவும், அதில் தங்கள் பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் அவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். கத்தாரில் சிக்கித் தவிக்கும் இந்த தொழிலாளர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, எவ்வளவு சீக்கிரம் மீட்டுக் கொண்டு வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டு கொண்டு வர வேண்டும் என்று கத்தாரில் சிக்கி தவிக்கும் தமிழக தொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளது’ நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி உள்ளதாக நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி வெங்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. கொரோனா வைரசுக்கு காற்றில் மிதக்கும் தன்மை கிடையாது: சி.எஸ்.ஐ.ஆர். மீண்டும் உறுதி
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து இன்னும் சர்ச்சை நிலவி வருகிறது.
3. பெங்களூருவில் 2 மணி நேரமாக தெருவோரம் வைக்கப்பட்டிருந்த கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர் ஒருவர் வீட்டிலையே உயிரிழந்ததை தொடர்ந்து, உடலை தெருவோரம் வைத்தபடி 2 மணி நேரமாக அந்த குடும்பத்தினர் அம்புலன்ஸூக்கு காத்திருந்துள்ளனர்.
4. கொரோனாவை தடுக்க அனைவருக்கும் முக கவசம் அவசியம்: சொல்வது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து உயிரைக்காப்பாற்றிக்கொள்வதில் முக கவசம், உயிர் கவசமாக மாறி இருக்கிறது
5. சீனாவில் இருந்து வந்த ”பிளேக்”: கொரோனா குறித்து டிரம்ப் மீண்டும் விமர்சனம்
சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரொனா வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.