மாநில செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் + "||" + For Small, Small and Medium Enterprises To lend heavily At the request of Chief Minister Palanisamy

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என வங்கிகளிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சென்னை

முதலமைச்சர் எடப்பாடி பழனிம்சாமி தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலர்கள், நபார்டு வங்கி அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன், சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதது.  ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும்.

3 முக்கியமான துறைகளை பற்றி விவாதிக்க உள்ளோம்.விவசாயத்திற்கான கடனுதவியை உடனுக்குடன் வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி வங்கிகள் உதவ வேண்டும்

தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சுமார் 1 கோடி பேர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.

மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் பங்கு 30 சதவீதம் ஆகும்.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் கோடியில், தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும் என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.
2. எடப்பாடி அருகே காரை நிறுத்தி பெண்களிடம் குறைகளை கேட்ட முதல்-அமைச்சர்
எடப்பாடி அருகே காரை நிறுத்தி சாலையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார்.
3. வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
4. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!
காவிரி டெல்டா பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ல் இன்று திறக்கப்பட்டுள்ளது.
5. சேலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது: ரூ.441 கோடியில் கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு மேம்பாலம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.