உலக செய்திகள்

30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம் + "||" + Three million Hong Kong residents 'eligible' for UK citizenship

30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்

30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்
ஹாங்காகங்கில் உள்ள 30 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா கோபம் கொண்டுள்ளது.
லண்டன்

ஹாங்காங்கை கட்டுப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டங்களை சீனா அமுல்படுத்தும் நிலையில், ஹாங்காகங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து  குடியுரிமை வழங்க இங்கிலாந்து 
உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

இங்கிலாந்தின்  இந்த முடிவு சீனாவை கொந்தளிக்கச் செய்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும் அதற்கென சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமைகளைப் பறிக்கும்
வகையில் கடந்த ஆண்டு ஒரு சட்டத்தைச் சீனா கொண்டு வந்தது.அதன்படி, ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரைச் சீனாவுக்குக் கடத்தி விசாரிப்பது உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு 
வரப்பட்டது.

மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதால் இதை தற்காலிகமாக அந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நேரத்தில் சீனா அரசு சத்தமில்லாமல் ஹாங்காங் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. முன்பு ஹாங்காங் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் இருந்துள்ளதால், அங்குள்ளோரில் பலர் வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் வெளிநாடுவாழ் இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ளனர்.

ஆகவே, சீனா அவர்களை ஒடுக்க முயலும் நேரத்தில், தன் குடிமக்கள் என்ற முறையில், அவர்கள் மீதான அக்கறையால்,இங்கிலாந்து சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது.அதன்படி, 350,000 வெளிநாடுவாழ் 
நாட்டினரின் விசா உரிமைகளை நீட்டிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

இது குறித்துப் பேசிய வெளியுறவுச்செயலர் டொமினிக் ராப்  வெளிநாடுவாழ் இங்கிலாந்து நாட்டினரின் விசா உரிமைகள் ஆறு முதல் 12 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இது, அவர்கள் எதிர்காலத்தில் 
இங்கிலாந்து குடியுரிமை பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும்.
ஆனால், இன்னொருபக்கம், புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட காலம் போராடி, இப்போதுதான்  ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியே கொண்டுவந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியினர், பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் குடிமக்கள் இங்கிலாந்திற்குள் வருவதை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா; கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா-இ்ங்கிலாந்து மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தொடரை வசப்படுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதி பெறும் உத்வேகத்துடன் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
2. இங்கிலாந்தில் மேலும் 7 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 290- பேர் உயிரிழந்துள்ளனர்
3. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
4. இந்திய பிரதமர் சீனாவை பார்த்து அஞ்சுகிறார் - தூத்துக்குடியில் ராகுல் காந்தி பேச்சு
இந்திய பிரதமர் சீனாவை பார்த்து அஞ்சுவதாக தூத்துக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
5. பிரிட்டனில் மேலும் 8,523- பேருக்கு கொரோனா
பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 8,523- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.