தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர் + "||" + Over 11,000 people have been infected in a single day from coronavirus in India

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

அதே போன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோர், சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11 ஆயிரத்து 264 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 370 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 47.40 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில் ஒரே நாளில் புதிதாக 7,964 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 763 ஆக அதிகரித்தது.

அதிகபட்ச பாதிப்பை சந்தித்து வரும் மாநிலமாக மராட்டியம் உள்ளது. அங்கு 62 ஆயிரத்து 228 பேருக்கு தொற்று உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 246 ஆகும். மூன்றாம் இடத்தில் இருக்கிற டெல்லியில் 17 ஆயிரத்து 386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 15 ஆயிரத்து 934, ராஜஸ்தானில் 8,365, மத்திய பிரதேசத்தில் 7,645, உத்தரபிரதேசத்தில் 7,284 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் 4,813, பீகாரில் 3,376, ஆந்திராவில் 3,436, கர்நாடகத்தில் 2,781, தெலுங்கானாவில் 2,425, பஞ்சாப்பில் 2,197, ஜம்மு காஷ்மீரில் 2,164, ஒடிசாவில் 1,723, அரியானாவில் 1,721, கேரளாவில் 1,150, அசாமில் 1,024, ஜார்கண்டில் 511, உத்தரகாண்டில் 716, சத்தீஷ்காரில் 415, இமாசலபிரதேசத்தில் 295, சண்டிகாரில் 289, திரிபுராவில் 251, லடாக்கில் 74, கோவாவில் 69, மணிப்பூரில் 59, புதுச்சேரியில் 51, அந்தமான் நிகோபாரில் 33, மேகாலயாவில் 27, நாகலாந்தில் 25 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அருணாசலபிரதேசத்தில் 3 பேரும், தாதர்நகர் ஹவேலியில் 2 பேரும், மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 422 ஆக இருக்கிறது.

ஒரே நாளில் நாடு முழுவதும் 265 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவுக்கு இந்தியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 4,971 ஆனது.

265 பேர் ஒரு நாளில் பலியானதில், மராட்டிய மாநிலத்தினர் 116 பேர் ஆவர். டெல்லியில் 82, குஜராத்தில் 20, மத்திய பிரதேசத்தில் 13, தமிழ்நாட்டில் 9, மேற்கு வங்காளத்தில் 7, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் தலா 4, பஞ்சாப்பில் 2, சத்தீஷ்கார், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, ஜார்கண்ட், கர்நாடகம், கேரளா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகியவற்றில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர்.

மொத்த பலி 4,971 பேரில் 2,098 பேருடன் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. குஜராத்தில் 980, டெல்லியில் 398, மத்திய பிரதேசத்தில் 334, மேற்கு வங்காளத்தில் 302, உத்தரபிரதேசத்தில் 198, ராஜஸ்தானில் 184, தமிழ்நாட்டில் 154, தெலுங்கானாவில் 71, ஆந்திராவில் 60, கர்நாடகத்தில் 48, பஞ்சாப்பில் 42, ஜம்மு காஷ்மீரில் 28, அரியானாவில் 19, பீகாரில் 15, கேரளாவில் 8, ஒடிசாவில் 7, இமாசலபிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்டில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சண்டிகார், அசாம் ஆகியவற்றில் தலா 4, மேகாலயா, சத்தீஷ்காரில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.

இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் புதிய உச்சம்-ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 71 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஆவடி மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா
ஆவடி மாநகராட்சி பகுதியில் சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் உள்பட ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
4. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.26 கோடியாக உயர்ந்துள்ளது.
5. தமிழகத்தில் ஒரே நாளில் 4,163 பேர் குணம் அடைந்தனர்
தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் 4,163 பேர் குணம் அடைந்தனர். 19 மாத குழந்தை உள்பட 64 பேர் உயிரிழந்தனர்.