தேசிய செய்திகள்

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி + "||" + "Large Parts Of Economy Open, Time To Be More Careful": PM On Mann ki Baat

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி
ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி

மான் கி பாத் நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்டு வரும் நிலையில் நாம் மேலும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கியக்காரணம். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைத்தான் உலகமே உற்று நோக்கியுள்ளது.

இந்தியா தனது சுய சக்தியில் செயல்படும் போது. பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படும்

ஆயுஷ்மான் திட்டத்தால் மக்கள் பயன்அடைந்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்கப்பட்டது

யோகா மூலம் சுவாசப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மக்கள் முயன்று வருகின்றனர். பிராணாயாமம் உள்ளிட்ட சில பயிற்சிகள் நமக்கு மிகச்சிறந்த தீர்வை அளிக்கும்.

கொரோனா போர்- மக்கள் இயக்கமாக மாறி உள்ளது.கொரோனாவை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கிராமங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெட்டுக்கிளி தாக்கத்தில் இருந்து விவசாயிகளை காக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளி பிரச்சினை விவசாயிகளை பாதிக்காமல் இருக்க புதிய உத்திகள், முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
2. இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரை
இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
3. எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை
எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
4. பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன?
கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
5. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.