உலக செய்திகள்

ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை கடந்தது + "||" + In Iran, the number of people affected by coronation crossed 1.51 lakh

ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை கடந்தது

ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சத்தை கடந்தது
ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1.51 லட்சத்தை கடந்துள்ளது.
தெஹ்ரான், 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 62,29,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,72,888 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ஈரான் நாட்டிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.   

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஈரானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,51,466 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 63 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 7,797 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 1,18,848 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ஈரான் 12-வது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (18,29,273 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (5,05,487 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (4,05,843 பேர்) உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 19 பேர் உடல் கருகி சாவு
ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
2. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய ஈரான் பிடிவாரண்டு பிறப்பித்தது
ராணுவ தளபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது ஈரான்.
3. சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்
சென்னையில் 59 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
4. அரசை விமர்சித்த ஈரானின் பிரபல நடிகைக்கு 5 ஆண்டுகள் சிறை
ஈரானிய நடிகை தரனாஹ் அலிதூஸ்டி, அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் செய்ததாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது-நிர்மலா சீதாராமன் பேச்சு
கொரானாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாட்டு மக்களின் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.