தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா + "||" + India has now become the world's seventh worst-hit country in terms of coronavirus cases

கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா

கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா
கொரோனா பாதிப்பில் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.
புதுடெல்லி

ஊரடங்கின் 5-வது கட்டத்தின் முதல் நாளில் இந்தியா நுழையும் போது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 புதிய கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளது. நாட்டில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,90,535 ஆகும். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின் படி 93322 செயலில் உள்ள பாதிப்புகள் மற்றும் 91819 பேர் குணமாகி உள்ளனர். 5394 இறப்புகள் பதிவாகி உள்ளது.

மே 31 வரை 67,655 கொரோனா பாதிப்புகளுடன் மராட்டியம் நாட்டிலேயே மிக மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் தொடர்கிறது.  மாநிலத்தின் மொத்த 67 ஆயிரம் பாதிப்புகளில் மும்பை மட்டும் 39,686 ஆக உள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் கொரோனா டிராக்கரின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் வழக்குகளின் பாதிப்புகளின்  அடிப்படையில் 1,82,143 எண்ணிக்கையுடன் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி இந்தியாவில் மொத்தம் 38,37,207 மாதிரிகள் இதுவரை சோதனை செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 1,00,180 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை- ஐ.நா. ஆய்வில் கணிப்பு
உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை நிகழும் என ஐ.நா. ஆய்வில் கணித்து உள்ளது.
3. கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது
புதிய மருத்துவ ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக் மகும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.
4. விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின் வாங்கின
சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் பாங்காங் த்சோவின் விரல் 4 பகுதியில் சீனாவின் படைகள் பின்வாங்கியதை காட்டுகின்றன.
5. 'பிரதமர் அக்கறை' நிதியை ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை
கொரோனா தொற்றுநோய்க்கான அரசாங்கத்தின் பதிலை அல்லது நெருக்கடியைச் சமாளிக்க அமைக்கப்பட்ட புதிய PM CARES நிதியை ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.