மாநில செய்திகள்

68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின + "||" + After 68 days, the state buses ply in Tamil Nadu today

68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின

68 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின
தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளுடனும் சுகாதாரத்துறையின் கடுமையான விதிகளைப் பின்பற்றியும் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.
சென்னை

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் பல தளர்வுகளை அளித்து,  ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அறிவித்தார். 

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. 

கோவை கோட்டத்தில் காலை 6 மணி முதல் ஆயிரத்து 326 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இம்மாவட்டத்தை பொறுத்தவரை 539 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் மட்டும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதேபோல் பொள்ளாச்சியில் இருந்து அருகாமை நகரங்கள் கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 

திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு காலை முதல் பேருந்து இயக்கம் தொடங்கியது. அதேபோல் நகர பேருந்து சேவையும் தொடங்கியுள்ளது.

57 இருக்கைகள் கொண்ட நகரப் பேருந்தில் 36  பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உட்பட அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே பயணிகளுக்கு பயணச் சீட்டுகளை வழங்குகின்றனர். இதேபோல் வத்தலகுண்டு பணிமனையில் இருந்து திண்டுக்கல், மதுரை, பெரியகுளம், தேனி, உசிலம்பட்டி என 20 வெளியூர் பேருந்துகளும், பட்டிவீரன்பட்டி, எம் வாடிப்பட்டி, கொடைரோடு, விருவீடு மற்றும் எழுவனம்பட்டி என 13 நகர பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

வேலூரில் இருந்து மாவட்ட எல்லைக்குள் 130 அரசுப் பேருந்துகளும் அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்ட பயணிகள், தனிநபர் இடைவெளிவிட்டு இருக்கைக்கு ஒருவராக அமரவைக்கப்பட்டனர் . 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா
டெல்லியில் மருத்துவமனையில் கொரோனா பாதித்து, குணமடைந்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை- ஐ.நா. ஆய்வில் கணிப்பு
உலக அளவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிராக 3.1 கோடி வன்முறை நிகழும் என ஐ.நா. ஆய்வில் கணித்து உள்ளது.
3. கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக்கும் அதிகமாக சர்க்கரை இருந்தால் மரணங்கள் நிகழ்கிறது
புதிய மருத்துவ ஆய்வில் கொரோனா நோயாளிகளுக்கு ரத்தத்தில் இயல்புக் மகும் அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தால் அதன் மூலம் அதிக மரணங்கள் நிகழ்வதாக தெரிய வந்துள்ளது.
4. 'பிரதமர் அக்கறை' நிதியை ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை
கொரோனா தொற்றுநோய்க்கான அரசாங்கத்தின் பதிலை அல்லது நெருக்கடியைச் சமாளிக்க அமைக்கப்பட்ட புதிய PM CARES நிதியை ஆராய்வதில் பொதுக் கணக்குக் குழுவால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.
5. உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 228,102 ஆக உச்சம் தொட்டுள்ளது
உலக அளவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 228,102 அதிகரித்துள்ளது.