உலக செய்திகள்

ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Russia reports 9,035 new coronavirus infections

ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 63,12,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,74,863 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 4,14,878 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 162 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 4,855 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 1,75,877 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (18,42,714 பேர்), இரண்டாம் இடத்தில் பிரேசிலும் (5,14,992 பேர்) உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது
ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,07,301 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 7,07,301 ஆக உயர்ந்துள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,94,230 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,94,230 ஆக உயர்ந்துள்ளது.
4. ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,74,515 ஆக உயர்வு
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 6,74,515 ஆக உயர்ந்துள்ளது.
5. ரஷ்யாவிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்
ரஷ்யாவிடம் இருந்து ரூ.18,148 கோடியில் 33 போர் விமானங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.