தேசிய செய்திகள்

33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆம் ஆத்மி எம்.பி. + "||" + AAP's Sanjay Singh sending 33 migrants home with flight tickets from MP quota

33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆம் ஆத்மி எம்.பி.

33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து சென்ற ஆம் ஆத்மி எம்.பி.
டெல்லியில் இருந்து பீகாருக்கு 33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஆம் ஆத்மி எம்.பி.யான சஞ்சய் சிங், விமானத்தில் அழைத்து சென்றார்.
புதுடெல்லி, 

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான சஞ்சய் சிங் தனது எம்.பி. ஒதுக்கீட்டின் கீழ், 33 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளார். டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவுக்கு இன்று(வியாழக்கிழமை) 33 தொழிலாளர்களுடன் விமானத்தில் அவரும் பயணிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானங்களில் ஆண்டுதோறும் 34 டிக்கெட்களை எம்.பி. ஒதுக்கீட்டின் கீழ் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டிக்கெட்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து செல்ல பயன்படுத்தும் முடிவை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், “சஞ்சய் சிங்கின் இந்த முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும். எல்லோரும் இதை செய்வார்கள். இந்த தனித்துவமான முயற்சியால் பலரும் ஈர்க்கப்பட வேண்டும். கடவுள் தங்களுக்கு கொடுத்த வளங்களை மற்றவர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்த வேண்டியது அவர்களுடைய பொறுப்பு. சஞ்சய் சிங் வாழ்த்துக்கு தகுதியானவர்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த டுவிட்டுக்கு பதிலளித்த சஞ்சய் சிங், “நன்றி அரவிந்த் கெஜ்ரிவால். இவைதான் நாம் கொண்ட லட்சியங்கள். இதற்காகத்தான் உங்களுடன் அரசியலில் இணைந்தேன். வாழ்நாள் முழுவதும் இதை பின்பற்ற முயற்சிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை
டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.
2. துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்தது
துருக்கியில் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடிய விமானம் இரண்டாக உடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது
ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.