தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 2,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + With 2,933 new Covid-19 cases, Maharashtra’s tally climbs to 77,793

மராட்டியத்தில் இன்று மேலும் 2,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 2,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 2,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் மராட்டியத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 2,933 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,793 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 996 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,329 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மும்பையை பொறுத்தவரை இன்று புதிதாக 1,439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நகரில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,931 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல வைரஸ் தொற்றுக்கு இன்று மேலும் 48 பேர் உயிரிழந்த்தால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,439 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 7,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்தது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது.
4. மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி
மராட்டியத்தில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
5. மராட்டியத்தில் நாளை முதல் கடைகளை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி
மராட்டியத்தில் நாளை முதல் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என மாநில அரசு அறிவித்து உள்ளது.